பேஸ்புக்கில் மதம் குறித்து அவதூறு கருத்து- இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது வழக்கு…

published 6 months ago

பேஸ்புக்கில் மதம் குறித்து அவதூறு கருத்து-  இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது வழக்கு…

கோவை:கோவை மாநகர பகுதியில் பேஸ்புக் பகுதிகளில் யாராவது அவதூறு கருத்து வெளியிட்டால் அது குறித்து நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி சிங்காநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் பேஸ்புக் கணக்குகளை ஆய்வு செய்தபோது கோவையை சேர்ந்த தமிழக  இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி ராமகிருஷ்ணன் என்பவர் 2 மதங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதனால் இரண்டு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்படும் என போலீசார் கருதினர்.
 

இது கறித்து சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தமிழகஇந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe