கோவை மக்களே கவனம்! உக்கடம் பாலத்தில் பயணத்திற்கு முன் இதைப்படிங்க!

published 6 months ago

கோவை மக்களே கவனம்! உக்கடம் பாலத்தில் பயணத்திற்கு முன் இதைப்படிங்க!

கோவை: கோவை மக்களே இன்று திறக்கப்பட உக்கடம் மேம்பாலத்தில் ஸ்பீடா போகாதீங்க.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை நேரான பாதையாக இல்லை. தற்போது அந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலமும், நேராக அல்லாமல் வளைந்து நெளிந்து செல்கிறது.

அதிவேகமாக இவ்வழியாகச் சென்றால், சாலை வளையும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் சுங்கம் பகுதியில் வரும் வளைவில், வாகன கட்டுப்பாட்டை இழந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதை நினைவில் கொள்ளுங்கள்.

உக்கடம் மேம்பாலத்தில் நீங்கள் இயக்கும் வாகனத்தை ஒரு சோதனை ஓட்டமாக நினைத்தே இயக்கத் தொடங்குங்கள். புதிய சாலை, புதிய பயணம் என்பதால் அதிவேகம் நிச்சயம் ஆபத்தைக் கொடுக்கும்.

இந்த மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்தத் தொடங்கிய பின், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து மாநகராட்சிக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் தெரியப்படுத்தி, பயணத்தை மேம்படுத்துவோம்.

இளசுகளுக்கு இச்செய்தியைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுங்கள். இன்ஸ்டாவில் உக்கடம் மேம்பாலத்தின் டிரோன் காட்சிகளைக் காண லிங்க்-ஐ சொடுக்கவும்: https://www.instagram.com/reel/C-boXGdSiTO/?igsh=bHJuZDcwNDJrN2dt
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe