உக்கடம் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்...

published 6 months ago

உக்கடம் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்...

கோவை: உக்கடம் -  ஆத்துப்பாலம் இடையே  ரூ.481.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து அதனை பார்வையிட்டார்.

கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும்,  ஆத்துப்பாலம் - உக்கடம் இடையேயான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது. 

இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆத்துபாலத்தில் இருந்து உக்கடம் வரை சுமார் 3.8 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2018 -ல் துவங்கப்பட்ட பணிகள் சற்று மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்து தற்போது நிறைவடைந்து உள்ளது.  

இந்த உக்கடம் மேம்பாலத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அப்பாலத்தின் வழியாகச் சென்று அதனை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிகள் தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஷ், முத்துசாமி, ஏ.வ.வேலு, பொன்முடி,  மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர்,  காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe