லிப்ட் கேட்பது போல் நடித்து வாலிபரிடம் ஸ்கூட்டர், செல்போன் பறித்த ஆசாமி உதவி செய்தவருக்கு நேர்ந்த சோகம்…

published 6 months ago

லிப்ட் கேட்பது போல் நடித்து  வாலிபரிடம் ஸ்கூட்டர், செல்போன் பறித்த ஆசாமி உதவி செய்தவருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகன் முகமது பைசல் (22). தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் கேரளாவில் இருந்து கோவை உக்கடத்தில் உள்ள அவரது நண்பரை பார்ப்பதற்காக வந்தார். 

பிறகு மீண்டும் ஸ்கூட்டரில் ஊருக்கு புறப்பட்டார். இரவு 10 மணியளவில்  வாலிபர் ஒருவர் மறித்து லிப்ட் கேட்டார். வாளையார் செல்ல வேண்டும் தனக்கு உதவும்படி கேட்டார். உடனே அந்த வாலிபரை முகமது பைசல் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது வாலிபர் அவரிடம் வாளையார் செல்ல குறுக்கு பாதை இருக்கிறது எனக்கூறி அவரை அழைத்து சென்றுள்ளார். 

அதை நம்பிய முகமது பைசல் அவர் காட்டிய வழியில் குறுக்கு பாதையில் சென்றார். அப்போது இருகூர் அருகே ஏ.ஜி.புதூர் டாஸ்மாக் கடை பின்புறத்தில்  சென்றபோது திடீரென அந்த வாலிபர் முகமது பைசலை மிரட்டி அவரது ஸ்கூட்டர் மற்றும் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை மிரட்டி விட்டு தப்பினார். இருட்டுக்குள் தவித்த முகமது பைசல் அங்கிருந்து நடந்தே வந்தார். பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.  

போலீசார் வழக்கு பதிவு செய்து லிப்ட் கேட்பது போல் நடித்து ஸ்கூட்டர், செல்போன் பறித்தவரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe