வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழா நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடியே காண்பதற்கு ஏற்பாடு...

published 6 months ago

வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழா நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடியே காண்பதற்கு ஏற்பாடு...

கோவை: சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழா 2024-ல் காலை 9.05 மணிக்கு, மாவட்டஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

பின்னர், இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடைபெறுவது போன்ற அணிவகுப்பு கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் ஆயுதப்படையினரால் நடத்தப்படவுள்ளது அதனைத்தொடர்ந்து, காளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் கோலாட்டமும், வாகராயம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் ஒயிலாட்டமும், சிஎஸ்.ஐ பெண்கள் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி மாணவியர்களின் கும்மியாட்டமும் நேஷனல் மாடல் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனமும், பிஎஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனமும்,
ஒத்தக்கால் மண்டப அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனமும், ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனமும், ஜிடி எம் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனமும், கே.ஜி உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் தேசிய ஒருமைப்பாட்டு நடனமும், என மொத்தம் சுமார் 700 மாணவ மாணவியர்கள்
கலந்துகொள்ளும் 9 கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக
பங்கு கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம்
இந்நிகழ்ச்சியினை பொதுமக்கள் வீட்டியிலிருந்து கண்டுகளிக்கும் வகையில்
மாவட்ட ஆட்சித்தலைவரின் சமூக ஊடக கணக்குகளான கீச்சகம்
(Twitter) Collector che முகநூல் (facebook) Collector Coimbatore
ஆகியவைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe