கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்..

published 6 months ago

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்..

கோவை: தொழில் நகரமாக விளங்கும் கோவை மாநகரின் முக்கிய தேவைகளில் ஒன்றாகவும், பல தொழில் துறையினரின் கோரிக்கையாக பல ஆண்டுகளாக கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் இருந்து வருகிறது.

இந்த  விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கபட்ட விமான நிலைய பணிகள் தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்  சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வேகமாக முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தார்.

அந்த வகையில் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்,மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஆலோசனை கூட்டம் கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

இதில் இதுவரை நிலம் கையகப்படுத்தபடாத காரணங்கள் அதற்கான தீர்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe