கோவை மாநகரில் சுதந்திர தினம் அமைதியாக நடைபெறும்- போலிஸ் கமிஷனர்...

published 6 months ago

கோவை மாநகரில் சுதந்திர தினம் அமைதியாக நடைபெறும்- போலிஸ் கமிஷனர்...

கோவை: கோவை மாநகரை பொறுத்தவரை சுதந்திர தின கொண்டாட்டம் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடைபெறும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளிதத அவர், குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல், இரவு பகல் என இரண்டு நேரங்களிலும் ரோந்து பணியில் பயன்படுத்தப்படும். ரேஸ் கோர்ஸில் ஏற்கனவே 'May I Help You" என்ற பூத் செயல்பாட்டில் இருக்கிறது, இது ஒரே இடத்தில் செயல்படும்.  ரோந்து பைக் காவலர்களின் பணியை எளிதாக்கி முழு பகுதியிலும் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த ரோந்து பைக் உருவாக்கப்பட்டுள்ளது." என்றார்.

சுதந்திர தின பாதுகாப்புகள் குறித்து, "கோவை மாநகர எல்லையில் உள்ள சோதனை சாவடிகள், வாகனத் தணிக்கை செய்யும் இடங்களில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணிவகுப்பு நடைபெறும் வ.உ.சி மைதானத்தில் நேற்றிலிருந்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் சோதனை செய்யப்படுகிறார்கள்.  மொத்தம் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரை பொறுத்தவரை சுதந்திர தின கொண்டாட்டம் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடைபெறும்." என்று உறுதி அளித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe