கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை- கோவையில் ஹோமியோபதி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்...

published 6 months ago

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை- கோவையில் ஹோமியோபதி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்...

கோவை: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

 

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாவட்ட ஹோமியோபதி மருத்துவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் கருப்பு உடை அணிந்து கண்டன பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், நாட்டில் மருத்துவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe