தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச Ecofest 24 மாநாடு...

published 5 months ago

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச Ecofest 24 மாநாடு...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். கோயம்புத்தூரில் Ecofest 24 நிலையான சினெர்ஜி: ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நெக்ஸஸை குறித்த சர்வதேச மாநாடு  நடைபெற்றது. மாநாட்டில் சுமார் 500 பங்கேற்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு கல்லூரி மற்றும் தொழில்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

முனைவர் ரவிராஜ் தனது உரையில் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் மாணவர்கள்: பல்வேறு தொழில்கள், MNCகள் மற்றும் NGO களில் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய பல்கலைக்கழகங்களான IIT, NIT கள் மற்றும் லெகோ, ப்ளூ பிரைட் போன்ற முன்னணி தொழில்முனைவோர்களின் வேலை வாய்ப்பு சாதனைகளை எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி தொடக்க விழாவிற்குத் தலைமை வகித்து, பல்வேறு (சென்னை இந்தியன் ஜியோ இன்பர்மேடிக்ஸ் சென்டர், இந்திய தரநிலைகள், புது தில்லி. ஜேகோபி கார்பன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர், எல்&டி கட்டுமான ஹெவி சிவில் உள்கட்டமைப்பு, சென்னை, பெப்சிகோ, ஹைதராபாத், ஹாட்சன் அக்ரோ ப்ராடக்ட் லிமிடெட். சென்னை, நெஸ்லே இந்தியா லிமிடெட். மைசூர், SWELECT HHV சோலார் ஃபோட்டோவோல்டாயிக்ஸ், கோயம்புத்தூர்,கோயம்புத்தூர் MAHSA பல்கலைக்கழகம், மலேசியா மற்றும் மாநில வன ஆராய்ச்சி நிறுவனம், சென்னை) தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய அவர் ஆற்றல்- சுற்றுச்சூழல் இணைப்பு, சூரிய ஆற்றல், ஹைட்ரஜன் எரிபொருள், கட்டிடங்களுக்கான நிலையான கூரை மற்றும் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு அரசாங்க முயற்சிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து சர்வதேச மாநாட்டின் சின்னம் மற்றும் சுருக்கங்களின் தொகுப்பை வெளியிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe