இரண்டு நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று அதிகரித்தது!

published 5 months ago

இரண்டு நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று அதிகரித்தது!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்து வந்தது. தற்போது தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

கடந்த 22ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 விலை குறைந்தது. 23ம் தேதி கிராமுக்கு ரூ.20 விலை குறைந்தது.

இதனிடையே இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.
தங்கம்  அறிவிப்புகளை அறிந்து கொள்ள NewsClouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்

இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,695க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.53,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.224 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,484க்கும், ஒரு பவுன் ரூ.43,867க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் கிராமுக்கு 1.30 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.93க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.93,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe