அரசு காப்பீடு திட்டங்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்- கோவையில் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவிப்பு...

published 5 months ago

அரசு காப்பீடு திட்டங்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்- கோவையில் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவிப்பு...

கோவை: கோவையில் உள்ள கே.ஜி (தனியார்) மருத்துவமனையில் "பெண் மருத்துவர்கள் நலன்" குறித்தான கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு உரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மருத்துவராக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. மருத்துவமனை கட்டணங்கள் அதிகமாக இருப்பது குறித்தான கேள்விக்கு,  அதற்குத்தான் காப்பீட்டு திட்டங்கள் உள்ளது. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஐந்து லட்சம் வரை பெரிய  மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற முடியும்.   காப்பீட்டு திட்டங்களை பிரபல படுத்த வேண்டும்.

பணம் இல்லாததால் சிகிச்சை பெற முடியாது என்ற நிலை மாற வேண்டும். தனியார் காப்பீடு திட்டங்களில் குறிப்பிட்ட தொகையை மற்றும் செலுத்துவது போல் இருக்க கூடும்  அரசு காப்பீடு திட்டமாக இருந்தால் முழுவதும் இலவசம்.  மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யாமல் உயிரிழப்புகள் ஏற்படுவது தற்பொழுது குறைந்து வருகிறது.

மருத்துவர்களின் ஓய்வு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை மருத்துவர்களுக்கான கழிப்பிட வசதிகள் குறித்தும் யாரும் கவலைப்படுவதில்லை. தமிழக அரசு ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று இது குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவ மாணவிகள் கூட இது சம்பந்தமாக பேசியதை கேள்வி பட்டேன்,  பிரதமர் ஸ்வச் பாரத் மூலம் கிராமங்களில் கூட கழிப்பிட வசதிகள் இருக்கும் பொழுது மருத்துவமனைகளில் எப்படி இல்லாமல் போகும்?. பெண்கள் பற்றிய பார்வையில் சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆன்லைன் மருந்து வசதி என்பது அவசர தேவைக்கு பயனுள்ளதாக அமையும், அதேசமயம் தடுக்கப்பட்ட மருந்துகள் எல்லாம் அதில் விற்பனை செய்வதை தடுப்பது குறித்து மருத்துவ உலகு ஆராய வேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe