கோவையில் பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட 3 பேர் கைது...

published 5 months ago

கோவையில் பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட 3 பேர் கைது...

கோவை: கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சின்னகண்ணான் புத்தூரைச் சேர்ந்தவர் ஆதிகணேஷ். இவர் அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் நந்தினி மீண்டும் கர்ப்பமானார். அவர் கடந்த 14 ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைத்து பெண் குழந்தை பிறந்தது. குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை ஆதிகணேஷ் - நந்தினி தம்பதியினர் விற்க முடிவு செய்தனர். இதற்காக அவர் இடைத்தரகர்களை தேடி வந்தனர். 

அந்நிலையில் இந்த தம்பதியினர் குழந்தையை விற்பனை செய்ய நினைத்து இருப்பதை அறிந்த கஸ்தூரி பாளையம், சத்யா நகரை சேர்ந்த இடைத்தரகர் தேவிகா என்பவர் நந்தினியை அணுகினார். அவர் நந்தினி இடம் கூடலூர் கவுண்டம்பாளையம் மாந்தோப்பைச் சேர்ந்த மகேஸ்வரன் - அனிதா தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருப்பதால் அவர்கள் உனது குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படுகிறார்கள் எனவே குழந்தையை என்னிடம் கொடு நான் அவர்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். 

இதை அடுத்து நந்தினி இடைத்தரகர் தேவிகா ஆகியோர் சேர்ந்த அந்த குழந்தையை அனிதாவிடம் ரூபாய் ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளனர். அதற்கான கமிஷனையும் நந்தினி மற்றும் அனிதாவிடம் தேவிகா பெற்று உள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஹெல்ப் லைன் மைய அதிகாரிகள் பெருநாயக்கன் பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தையை விற்ற அதன் தாய் நந்தினி இடைத்தரகராக செயல்பட்ட தேவிகா, அந்த குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். 

அத்துடன் அந்த பெண் குழந்தையையும் மீட்டனர். தொடர்ந்து இதுபோன்ற தேவிகா யாரிடமாவது குழந்தையை வாங்கி விற்பனை செய்து உள்ளாரா ? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe