கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக கேரளா, பெங்களூருக்கு சிறப்பு ரயில்!

published 2 weeks ago

கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக கேரளா, பெங்களூருக்கு சிறப்பு ரயில்!

கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக கேரளா மற்றும் பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

கொச்சுவேலி (திருவனந்தபுரம்) - SMVT பெங்களூரு இடையே, அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

கொச்சுவேலி - பெங்களூரு (SMVT) இடையே போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

· ரயில் எண்.06083 கொச்சுவேலி - SMVT பெங்களூரு சிறப்பு ரயில் கொச்சுவேலியில் இருந்து செப்டம்பர் 3ம் தேதி முதல் 24 வரை செவ்வாய்க் கிழமைகளில் மாலை 6.05 மணிக்குப் புறப்படும் பெங்களூருவை மறுநாள் 10.55 மணிக்கு சென்றடையும்.

 · ரயில் எண்.06084 SMVT பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து புதன்கிழமைகளில் செப்டர்மர் 4ம்தேதி 25 வரை மதியம் 12.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

ரயிலில் உள்ள பெட்டிகள் : ஏசி 3-அடுக்கு & ஸ்லீப்பர் வகுப்பு.

நிறுத்தங்கள்: கொல்லம், காயங்குளம், மாவேலிகரா, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், 

பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம்.

இவ்வாறு தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe