கோவையில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றிய குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள்...

published 5 months ago

கோவையில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றிய குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள்...

கோவை: கோவை சூலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் 43வது மாநாமாநாட்டில்  குடிநீர் வாரியத்தில் அவுட் சோசியல் முறையை கைவிடுதல் உள்ளிட்ட 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் 43-வது மாநாடு கோவை சூலூர் கலங்கல் சாலையில் உள்ள புத்ததேவ் பட்டாச்சார்யா நினைவு அரங்கில் (எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபம்) சனியன்று நடைபெற்றது. குடிநீர் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் மாநாட்டு கொடியை ஏற்றிவைத்து தலைமை உரையாற்றினார். உயிரிழந்த பணியாளர்களுக்கு அஞ்சலி தீர்மானத்தை  இணைச் செயலாளர் எம்.சசிகுமார் முன்மொழிந்தார். உதவி தலைவர் சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார். 

சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்க உரை நிகழ்த்தினார். சங்கத்தின் வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் சரவணன் முன்வைத்து வேலை அறிக்கையின் மீதான பிரதிநிதிகள் விவாதத்தை துவக்கி வைத்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவு செலவு அறிக்கையை எழுத்துப்பூர்வமாக முன் வைத்தார். உதவி தலைவர் பாலகுமார், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் மத்திய அமைப்பின் உதவி தலைவர் ஐயப்பன் சிறப்புரை ஆற்றினார். சங்க நிர்வாகி பிலிப்ஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.  

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக பணி வழங்குதல், வாரிசு அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பதவிகளை வழங்குதல், எலக்ட்ரிக்கல் டிப்ளமோ படித்துள்ள மின்பணியாளர்களுக்கு கண்காணிப்பாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பதவிகளை வழங்குதல், கூட்டுக் குடிநீர் திட்டங்களை பராமரிக்க அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் வாரியமே பராமரிப்பு பணிகளை நிர்வகித்தல், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போலவே அகவிலைப்படி உயர்வை வாரிய பணியாளர்களுக்கும் வழங்குதல், வாரியத்தில் பணி ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வு கால பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. 

குடிநீர் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் கோரிக்கைகள் நியாயமானவை. அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe