தடாகம் அருகே வீட்டை சேதப்படுத்தி மாட்டு தீவனங்களை ருசி பார்த்த காட்டுயானை...

published 2 weeks ago

தடாகம் அருகே வீட்டை சேதப்படுத்தி மாட்டு தீவனங்களை ருசி பார்த்த காட்டுயானை...

கோவை: கோவை சுற்றுவட்டார கிராம பகுதிகளான தொண்டாமுத்தூர், தடாகம், பேரூர், நரசிபுரம், மதுக்கரை, மருதமலை போன்ற பகுதிகளில் நாள்தோறும் உணவு தேடி இரவு நேரங்களில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது ஒற்றைக் காட்டு யானை. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவிய கடும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொது மக்களுக்கும், விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மனிதர்களின் ருசியான உணவுகளை உண்டு பழகிய காட்டு யானைகள் வறட்சி நிலை மாறிய பிறகும் வனப்பகுதிகளுக்குள் செல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து அங்கு ஆடு, மாடு, கோழி போன்ற வளர்ப்பு விலங்குகளுக்கு வைத்து உள்ள தீவனங்களை உண்டு விவசாயிகள் பயிரிடப்பட்டு உள்ள பயிர்களையும் சேதத்தை ஏற்படுத்தி செல்கிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை சின்ன தடாகம் பகுதியில் உள்ள வடவள்ளிக்காரர் என்ற சண்முகம் என்பவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்சார வேலியை சேதப்படுத்தி உள்ளே அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்குள் சென்று மேற்கூரைகளை சேதப்படுத்தி அங்கு மாடுகளுக்கு வைக்கப்பட்டு இருந்த தீவனங்களை தின்று தூக்கி வீசி சூறையாடி சென்று உள்ளது. மேலும் அங்கு பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம் பயிர்களை சேதத்தை ஏற்படுத்தி சென்றது. 

அரசு மற்றும் வனத் துறையினர் யானைகள் மேலும் சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுத்து, சேதத்தை ஏற்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளிம் வேண்டுகோளாக உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe