கோவையில் இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு: வாகன ஓட்டி அதிர்ச்சி…

published 5 months ago

கோவையில் இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு: வாகன ஓட்டி அதிர்ச்சி…

கோவை: சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் ஒரு போட்டோ ஸ்டுடியோ முன்பு சாலை ஓரம்  நிறுத்தி இருந்த தினேஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் மண்ணுளிப் பாம்பு இருந்தது. தனது வாகனத்தில் பெட்ரோல் உள்ளதா இல்லையா என பார்க்க ஸ்கூட்டரின் டேங்கைய் திறந்த போது அங்கு பாம்பு இருப்பது தெரிய வந்தது. 

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ் செய்வதறியாது திகைத்து நின்றார். இதனை அடுத்து அங்கு பாம்பைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடியது. உடனடியாக அருகில் இருந்த பாம்பு பிடி வீரர் சஜீஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக அங்கு வந்த சஜீஸ் இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார் மேலும் அந்த பாம்பானது அரிய வகை மண்ணுளிப் பாம்பு என கூறினார்.

 இதனது வால் பகுதியும் தலை போன்று இருப்பதால் இரண்டு தலை உள்ள பாம்பு எனவும் இதைக் கூறுவர். இது விஷத்தன்மை அற்றது எனவும் மருத்துவத்துக்காக சிலர் இதை அதிக விலைக்கு விற்பதாகவும் தெரிவித்தார்.  பிடிபட்ட பாம்பை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த காட்டில் விடுவதாக கூறிச் சென்றார்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/qeMeKZLcdpI?si=vxZseNAXXgVPcft_

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe