தெருகூத்து நாடகம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை மாணவிகள்...

published 5 months ago

தெருகூத்து நாடகம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை மாணவிகள்...

கோவை: தமிழ்நாடு போக்குவரத்து வார்டன் அமைப்பு மற்றும் நிர்மலா மகளிர் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு சுற்றுக் காவல் (Road Safety Patrol) சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் நல்ல சமாரிட்டன் திட்டம்(Good Samaritan Scheme) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை சுங்கம் பகுதியில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து பிரிவு கூடுதல் துணை ஆணையர் இரவிச்சந்திரன் கலந்து கொண்டார்.

50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், சாலை விதிகளை மதித்தல் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்தும் விபத்தில் சிக்கியவருக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உதவும் நல்ல சமாரிட்டன் திட்டம் குறித்தும் மாணவிகள் பதாகைகளை ஏந்தியபடி வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், தெரு நாடகம், மாடு ஆட்டம் வாயிலாகவும் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாடு முகமூடி அணிந்து கொண்டு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகளை கண்டு அனைவரும் வியந்தனர்.  

மாணவிகள் மத்தியில் பேசிய போக்குவரத்து பிரிவு கூடுதல் துணை ஆணையர் இரவிச்சந்திரன், ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக பயணித்தால் மட்டுமே சாலை பாதுகாப்பு என்பது வெற்றியடையும் என்றும் விபத்தில்லா கோவையை உருவாக்கலாம் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe