கோவையில் தங்கும் விடுதியில் செல்போன் திருட்டு- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

published 5 months ago

கோவையில் தங்கும் விடுதியில் செல்போன் திருட்டு- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

கோவை: கோவையில் பட்ட பகலில் தனியார் தங்கும் விடுதிகளில் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

கோவை பீளமேடு பகுதியில்  லவ்லி நெஸ்ட் மென்ஸ் எனும் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த  பிரவீன் குமார் (22) என்பவர் தங்கி கொண்டு அருகில் உள்ள டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பகலில் விடுதி அறையில் உறங்கி கொண்டுள்ளார். பின்பு எழுந்து பார்க்கும் போது அவரது விலை மதிப்புள்ள செல்போன் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் மெதுவாக நடந்து வந்து அறைக்குள் சென்று திருடிவிட்டு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து பிரவீன்குமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றன.

கோவை மாநகரத்தில் அண்மையில் தொடர்ந்து இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடிய சம்பவம் அரங்கேறி வந்த நிலையில் தற்போது பட்டப்பகலில் தனியார் தங்கும் விடுதிகளில் புகுந்து கை வரிசை காட்டிவரும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/watch?v=dHx3QKio7fc

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe