இங்கும் தேர்தல்! EVM இயந்திரத்தில் வாக்கு செலுத்திய கோவை மாணவர்கள்!

published 5 months ago

இங்கும் தேர்தல்! EVM இயந்திரத்தில் வாக்கு செலுத்திய கோவை மாணவர்கள்!

கோவை: கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி மாணவர் தலைவர் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலமாக நடத்தப்பட்டது.

மசக்காளிபாளையம் பள்ளியில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கோயம்புத்தூர் ராக் அமைப்பின் நிதி உதவியுடன் வடிவமைக்கப்பட்டது. கடந்த வாரத்திலேயே மாணவர்களுக்கு இதில் வாக்களிக்கும் முறை விளக்கப்பட்டது.

மாணவர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் வழிமுறைகளை அறிவதோடு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வாறு வாக்களிப்பது போன்ற வழிமுறைகளை தெரிந்து கொண்டனர்.

எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 500 க்கும் மேலான மாணவர்கள் இந்த தேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாணவர்களே செயல்பட்டனர்.

வேட்புமனுத் தாக்கல், பிரச்சாரம் என அனைத்துமே பொதுத்தேர்தலில் இருப்பது போல கடைபிடிக்கப்பட்டன.

550 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இதில் இன்று வாக்களித்தனர் 9 மாணவர்கள் வேட்பாளராக போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் முடிவுகள் நாளை காலை வெளியிடப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் வாக்களிக்கும் வீடியோவை காண : https://youtu.be/H9gQzMIb_o8

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe