கோவையில் நடைபெற்ற ஓணம் பண்டிகை- ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மகாபலி மன்னர்...

published 5 days ago

கோவையில் நடைபெற்ற ஓணம் பண்டிகை-  ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மகாபலி மன்னர்...

கோவை: மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை பாலக்காடு சாலையில் உள்ள ஏஜேகே (தனியார்) கல்லூரியில் ஓணம் பண்டிகை  கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓணம் பண்டிகையின் முக்கியமான மன்னராக கருதப்பட கூடிய மகாபலி மன்னரை வேடமணிந்த மாணவரை ஹெலிகாப்டர் மூலம் கல்லூரிக்கு அழைத்து வந்தனர். 

இது அங்கிருந்த மாணவர்கள் கல்லூரி ஆசிரியர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மேலும் பூ கோலமிட்டு மோகினி ஆட்டம், களறி ஆகியவற்றை நடைபெற்றன.

மேலும் இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகள், ஓணம்  சேலை, வேஷ்டி சட்டை, வண்ண வண்ண புத்தாடை அணிந்து ஜமாப், சண்டைமேளம், சினிமா பாடல்களுக்கு உற்சாக நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டடினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe