சூலூர் அருகே நகை வியாபாரியிடம் மோசடி- சிறார்கள் உட்பட 4 பேர் கைது, தங்கம் பறிமுதல்!

published 5 days ago

சூலூர் அருகே நகை வியாபாரியிடம் மோசடி-  சிறார்கள் உட்பட 4 பேர் கைது, தங்கம் பறிமுதல்!

கோவை: கோவை அருகே நகை வியாபாரி ஒருவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கக் கட்டிகளை ஏமாற்றி பெற்றுக் கொண்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு கிலோ தங்க கட்டிகள் மற்றும் கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிசங்கர் என்பவர், சூலூரில் உள்ள தனது நண்பர் கல்யாணராமன் மூலம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாபு என்ற சந்திரசேகருக்கு அறிமுகமாகியுள்ளார். சந்திரசேகர், ஹரிசங்கரிடம் தனது வசம் அதிக பணம் இருப்பதாகவும், தங்கக் கட்டிகளை வாங்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். 

இதனை நம்பிய ஹரிசங்கர், சந்திரசேகருக்கு ஒரு கிலோ தங்கக் கட்டிகளை கொடுத்துள்ளார். ஆனால், பணம் கொடுக்காமல் சந்திரசேகர் தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து ஹரிசங்கர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாப்பம்பட்டி பிரிவில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாபு, நவீன் குமார், பிரபு மற்றும் இளம் சிறார் உட்பட 4 பேர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. 

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், நகை மோசடி சம்பவத்தில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இளம் சிறார் அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe