தங்கம் விலை மீண்டும் எகிறியது!

published 2 days ago

தங்கம் விலை மீண்டும் எகிறியது!

கோவை: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதிரடியாக விலை சரிவைச் சந்தித்து வந்தன.

இந்த விலை குறைவு கொஞ்ச காலமே நீடித்த நிலையில் தற்போது தங்கம் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு பவுன் தற்போது ரூ.55 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகத் தொடங்கியுள்ளது.

இன்று ஒரு பவுனுக்கு ரூ.120 விலை உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,400 விலை அதிகரித்துள்ளது.
தங்கம்  அறிவிப்புகளை அறிந்து கொள்ள NewsClouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம் 
தற்போது 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,880க்கும், ஒரு பவுன் தங்கம்  ரூ.55,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 கிராம் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 விலை அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,663க்கும், ஒரு பவுன் ரூ.45,088க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.98க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe