சீருடைக்கு உண்டான தொகை வழங்காத போக்குவரத்து கழகம்- கோவை பேருந்துகள் ஜப்தி...

published 5 months ago

சீருடைக்கு உண்டான தொகை வழங்காத போக்குவரத்து கழகம்- கோவை பேருந்துகள் ஜப்தி...

கோவை: தமிழ்நாடு  போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கப்படும் பேருந்துகளில் பணியாற்றும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சீருடைக்கு உண்டான பணம் தரப்படவில்லை என புகார்கள் எழுந்தன. 

அதற்கான ஒப்பந்தத்தின் படி வருடத்திற்கு நான்கு ஜோடி சீருடைகளுக்கு உண்டான பணத்தை தர வேண்டும்,  இந்த நிலையில் தமிழ்நாடு அரசாங்கத்தின் போக்குவரத்துக் கழகம் சார்பாக, இந்த நிதி தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் மோகன்ராஜ் என்ற நடத்துனர் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் ஆறு வருடத்திற்கு உண்டான 46 ஆயிரத்து 583 ரூபாய் பணம் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நிதி வழங்கப்படாமல் இருந்திருக்கின்றன.

இது தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருந்த போக்குவரத்துக் கழகத்தின் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன. பணிவரன் முறை செய்யப்பட்ட நிலுவைத் தொகை 2007 முதல் வழங்கப்படாத குறித்து , நடத்துடனர் கேபி சக்திவேல் என்பவர் முறையிட்ட வழக்கின் அடிப்படையில் ஒரு பேருந்து ஜப்தி செய்யப்பட்டன.  இரண்டு மாநகர பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டிருக்கின்றன ரத்து செய்யப்பட்ட பேருந்துகள் நீதிமன்ற வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

உடனடியாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உண்டான சீருடை தொகை மற்றும் பணி வரன்முறை செய்யப்பட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சீருடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe