கோவையில் மண் கடத்தல் விவகாரம்- கள ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்...

published 4 months ago

கோவையில் மண் கடத்தல் விவகாரம்- கள ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்...

கோவை: கோவை, பேரூர் வட்டம் ஆலந்துறை, காளிமங்கலம், தேவராயபுரம், வால்கரடு மற்றும் மதுக்கரை வட்டம் கரடிமடை ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மண் எடுத்து செங்கல் உற்பத்தி நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இதை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையை காணாமல் போய்விடும் என கவலை தெரிவித்த நீதிபதிகள் சட்ட விரோதமாக மணல் கடத்தும் நபர்களை உடனடியாக தடுத்து அவர்களை கைது செய்து இயந்திரங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த இடங்களில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார்   இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறைகேடாக சட்டவிரோதமாக மண் எடுப்பதும், செங்கல் தயாரிப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடவும், மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும், உரிய அனுமதியின்றி கைகளால் செங்கல் தயாரிப்பதை தடுக்க சூளைகளுக்கு சீல் வைக்கவும் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe