கோவையில் சட்டவிரோத மது விற்பனை- படுக்கும் கட்டிலை கொண்டு சீல் வைத்த அதிகாரிகள்...

published 4 months ago

கோவையில் சட்டவிரோத மது விற்பனை- படுக்கும் கட்டிலை கொண்டு சீல் வைத்த அதிகாரிகள்...

கோவை: கோவை, தொண்டாமுத்தூரில் இருந்து நரசிபுரம் செல்லும் சாலையில் அதிகாலையிலே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் அப்பகுதியில் திடீர் ஆய்வு செய்த காவல் துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது தெரியவந்தது உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவு பேரில் அங்கு செயல்பட்டு வந்த டாஸ்மார்க் பார் முழுவதையும் தகரத் தகடுகளை கொண்டு மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும் அப்பகுதிக்கு சென்ற பேரூர் தாசில்தார் டாஸ்மார்க் பார் கடையின் ஊழியர்கள் படுத்து உறங்க வைத்து இருந்த வயர் கட்டில் இரண்டை எடுத்து ஒன்றிணைத்து அதில் கம்பி கட்டி பூட்டி அதற்கு சீல் வைத்தார். இதைப் பார்த்த அங்கு மது குடிக்க வந்த மது பிரியர்கள் அதைப் பார்த்து அலட்சியமாக   சிரித்து நகைச் சுவையாக பேசிக் கொண்டு செல்கின்றனர்.

உயர் அதிகாரிகள் தகர தகடுகளை முழுவதுமாக மூடி சீல் வைக்க உத்தரவிட்டு இருந்த நிலையில் படுத்து உறங்கும் வயர் கட்டில வைத்து மூடி சீல் வைத்த சம்பவம் மது பிரியர்கள் இடையே நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe