கோவையில் மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ்...

published 4 months ago

கோவையில் மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ்...

கோவை; கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியல் டாக்டர் அம்பேத்கார் மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது மொத்தம் 150 க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி வருகின்றனர். 

அதனைத் தொடர்ந்து 10  கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளாகத்திலேயே புதியதாக அனைத்து வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இன்று கோவை வந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது கட்டிடம் கட்டப்பட்டு வரும் இடம் மற்றும் அதன் வரைபடம் பணிகள் எவ்வாறு என்பது உள்ளது குறித்து எல்லாம் ஒப்பந்ததாரர் இடம் கேட்டறிந்தார் அதனை தொடர்ந்து மாணவர் விடுதிக்குள் சென்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாணவர் விடுதியில் உள்ள வேலையாட்கள் மற்றும் அங்கு தங்கி கல்வி பயின்று வரும் மாணவிகளிடம் மாணவியர் விடுதியில் அளிக்கப்படும் வசதிகள் மற்றும் உணவு போன்றவை குறித்து  கலந்துரையாடினார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்

கோவையில் 10 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது அந்த பணிகளை தற்பொழுது நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டோம்.  இப்போது கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஆனது அனைத்து வசதிகளுடன் குறிப்பாக கட்டிடத்திற்குள்ளேயே மாணவிகள் தங்கு மறையில் குளியலறைகள் மேதைகள் நாற்காலிகள் கட்டில்கள் போன்றவை அனைத்தும் இடம்பெறும் வகையில் செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது இதே போல தமிழகத்தின் திருச்சி மதுரை சென்னை சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் மாணவர் விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe