கோவையில் கீழே கிடந்த ரூ.50,000-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் பாராட்டு !!!

published 4 months ago

கோவையில் கீழே கிடந்த ரூ.50,000-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் பாராட்டு !!!

கோவை: கோவை, மாநகரில் சாலையில் கிடந்த ரூ.50,000 - ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சான்றிதழ் அளித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் உள்ள ஒரு சாலையில் ஒருவர் ரூ.50,000 பணத்தை அண்மையில் தவறவிட்டு உள்ளார். இந்த பணம் அடங்கிய பண்டில் கேட்பாரின்றி கிடந்து உள்ளது. இந்நிலையில் அந்த வழியே வந்த நிர்மலா எனும் பெண் இந்த பண்டிலைப் பார்த்து உள்ளார். 

அதில் ரூ.50,000 இருப்பதைக் கண்டதும், அருகில் உள்ள C-2 பந்தய சாலை காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்து உள்ளார். நேர்மையாக செயல்பட்ட நிர்மலாவை கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவரது நேர்மையான செயலுக்காக சான்றிதழையும் வழங்கினார்.

இத்தகைய நேர்மையான செயல்கள் சமூகத்தில் நல்ல முன்னுதாரணமாக அமையும் என்றும், மற்றவர்களும் இதுபோன்ற நேர்மையான செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். பொதுமக்களின் ஒத்துழைப்பு காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe