விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை? கோவையில் தொல்.திருமாவளவன் தெரிவித்த பதில்...

published 4 months ago

விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை? கோவையில் தொல்.திருமாவளவன் தெரிவித்த பதில்...

கோவை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணைப் பொதுச் செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜூனா , துணைமுதல்வராக திருமாவளவன் வர வேண்டும் என தெரிவித்திருந்தது திமுக- விசிக கூட்டணிக்குள் சலசலப்பை  ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனிடம்  இது தொடர்பாக தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திமுக - விசிக இரு கட்சிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை  விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை என்றார்.
மேலும் என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான சிறிய வீடியோவில் ஆட்சியிலும் பங்கு , அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டதாகவும்,
அந்த விவாதம் மேலும் ,மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்திருக்கிறது எனவும் அதனால் திமுக , விசிக இடையில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் மீது நடவடிக்கை இருக்குமா என்ற கேள்வி எழுப்பியதற்கு, உட்கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு கலந்து பேசி தான் எந்த நடவடிக்கையும் இருக்கும் எனவும்,
கட்சி விவகாரங்களை முன்னணி பொறுப்பாளர்கள் , பொதுச் செயலாளர் உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களுடன் இது குறித்து தொலைபேசி மூலமாக பேசியிருப்பதாகவும், மீண்டும் அவர்களுடன கலந்து பேசி அது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe