கோவையில் நடைபெற்ற வள்ளிக்கும்மியாட்டம்- அசத்திய நடனக்குழுவினர்...

published 4 months ago

கோவையில் நடைபெற்ற வள்ளிக்கும்மியாட்டம்- அசத்திய நடனக்குழுவினர்...

கோவை: கோவையில் நடைபெற்ற ஒயிலாட்டம் அரங்கேற்றத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என நூற்றுக்கணக்கானோர் வண்ண ஆடைகளுடன் பம்பை இசைக்கு ஏற்ப உற்சாக நடனம் ஆடி அசத்தினர்.



கோவையை சேர்ந்த சிம்மக்குரல் கலைக்குழு சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம்,வள்ளிகும்மியாட்டம்,காவடியாட்டம் ஆகிய கலைகள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.கிராமப்புறங்களில் மட்டுமே இந்த கலைகளை பலர் கற்று வந்த நிலையில்,தற்போது இளம் தலைமுறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் இது போன்ற தமிழக பாரம்பரிய கலைகளை ஆர்வமுடன் கற்று வருகின்றனர்..

இந்நிலையில் இவ்வாறு 
பயிற்சி பெற்ற ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா விளாங்குறிச்சி பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது.திறந்த வெளி மைதானத்தில் காளைகளுடன்,பாரம்பரிய கலைகள் குறித்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் சிம்மக்குரல் கலைக்குழுவினரின் தலைவர் சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர் நவீன் குமார் தலைமையில் இருகூர் பம்பை இசைக்கு ஏற்றபடி கிராமிய பக்தி பாடல்களை பாட,அதற்கு ஏற்றாற் போன்று சிறுமியர்கள் மற்றும் இளம்பெண்கள் வண்ண உடைகளுடன் காலில் சலங்கை கட்டி ஒருசேர நடன அசைவுகளை வெளிப்படுத்தி கூடியிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்..

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe