அமைச்சர் நிர்மலாவை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்! என்ன சொல்கிறது விஸ்வகர்மா?

published 4 months ago

அமைச்சர் நிர்மலாவை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்! என்ன சொல்கிறது விஸ்வகர்மா?

கோவை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு வருகை புரிந்திருந்தார்.


அப்போது செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும் போது "விஸ்வகர்மா குலத்தொழில் இல்லை" எனக் கூறியதாகவும், "விஸ்வகர்மாவில் 18 தொழில்காரர்களை சேர்ப்பதாக" கூறியதாகவும் இதனை கண்டித்து தமிழ்நாடு ஐந்தொழில் விஸ்வகர்மா சமுதாய சங்கங்களில் கூட்டமைப்பினர்  தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இதில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய நிதி அமைச்சருக்கு எதிராகவும் அவர் கூறியதை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஸ்வகர்மா பேரவையின் நிறுவனத் தலைவர் எம்.பி.பாண்டியன், விஸ்வகர்மா என்பது ஐந்து ஜாதிகளை கொண்டது அதைப் பற்றி நிர்மலா சீதாராமனுக்கு அவர்களுக்கு தெரியவில்லை என்றார்.  விஸ்வகர்மா நலத்திட்டத்தில் 18 தொழில்களை செய்பவர்களை சேர்க்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பிய அவர் இதையே தென்மாவட்டங்களில் வேறு ஜாதியினரை சேர்க்க சொன்னால் மிகப்பெரிய கலவரம் உருவாகி இருக்கும் அல்லவா என தெரிவித்தார். 

மத்திய நிதியமைச்சர் தெரிந்து பேசுகிறாரா தெரியாமல் பேசுகிறாரா என்று எங்களுக்கு தெரியவில்லை ஆனால் அவர் கூறிய கருத்து மிக தவறான கருத்து அந்த கருத்தை உடனடியாக அவர் திரும்ப பெற வேண்டும் என கூறினார். அந்த கருத்தை திரும்ப பெறவில்லை என்றால் ரயில் மறியல் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்தக் கருத்தை அவர் திரும்ப பெறவில்லை என்றால் வாக்களிக்க மாட்டோம் எனவும் தேர்தலை புறக்கணிப்போம் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம் என தெரிவித்தார்.  

விஸ்வகர்மா தொழிலாளர்கள் என்றால் தச்சுத் தொழிலாளர், தங்க நகை தொழிலாளர், பாத்திர தொழிலாளர், இரும்பு தொழிலாளர், சிற்பத் தொழிலாளர் தான் என தெரிவித்த அவர் இது தமிழ்நாடு கெஜட்டிலும் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த கருத்தை கூறியதற்கு நிர்மலா சீதாராமம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார். ஒரு மத்திய அமைச்சராக இருப்பவர்கள் அரசாங்க கெஜட்டில் இருப்பதை எல்லாம்  பார்த்து தானே பேச வேண்டும்?  இப்படி தவறாக பேசியது எங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். பிரதமர் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு நல்லதை தான் செய்ததாகவும் ஆனால் இவர் கூறிய கருத்து மிகத் தவறான கருத்து என்ன சாடினார்.

மேலும் இந்த பிரச்சனை இது சம்பந்தமாக வந்தாலும் பயப்பட போவதில்லை சிறை செல்லவும் தயார் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe