கோவையில் தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளிக்கும் நிகழ்ச்சி

published 2 years ago

கோவையில் தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளிக்கும் நிகழ்ச்சி

கோவை: நாட்டில் உள்ள ஸ்டார்ட்  அப்கள் , தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக , நிறுவனங்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் ஏ.ஐ.சி விண்ணப்பங்கள்  வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.

நி ஆயோக், அடல் இன்னோவேஷன் மிஷன் மற்றும் ஏ.ஐ.சி ரைஸ் ஆகியோர் இணைந்து,ஏ.ஐ.எம் ஃபார் இன்ஸ்டியூஷன்ஸ் (A.I.M FOR INSTITUTIONS), எனும் தலைப்பில் நிகழ்ச்சி கோவையில்  உள்ள உள்ள ஹோட்டல் பார்க் எலான்சாவில் நடைபெற்றது.

ஏ.ஐ.சி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர் நாகராஜ் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில், ஏ.ஐ.சி.ரைஸின் , முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் மதன் ஏ செந்தில் , நிதி ஆயோக்கின் இயக்குனர் ரோஹித் குப்தா , அடல் இன்னோவேஷன் மிஷனின் இளம் வல்லுநர்கள் ப்ரித்வி , ஆஷிஷ் பாண்டே - மற்றும் ஏ.சி.ஐ.சி - இன் இளம் நிபுணர்  அன்மோல் சேகல் ஆகியோர்  முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த கல்வி நிறுவனங்களின் பல்கலைக்கழக உறுப்பினர்கள் மற்றும் கலை , மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி பிரதிநிதிகள், கல்லூரிகளின் துணைவேந்தர்கள் , முதல்வர்கள் , தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அடல் இன்னோவேஷன் மிஷன் ஒரு கல்வி நிறுவனத்தில் அடல் இன்குபேஷன் சென்டர் அமைப்பதற்கு ரூ . 10 கோடி மற்றும் அடல் சமூக புத்தாக்க மையம் அமைப்பதற்கு ரூ.2.5 வழங்குவதாக அறிவித்தது. மேலும் அடல் இன்னோவேஷன் மிஷன் குழு விண்ணப்ப நடைமுறையை குறித்து விளக்கினர்.

மேலும் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆதரவுகள் , நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதைப் புரிந்துகொள்வதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து கூறினர் 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe