உதடு அண்ணப்பிளவு குறித்து கோவை ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு...

published 4 months ago

உதடு அண்ணப்பிளவு குறித்து கோவை ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு...

கோவை:உதடு, அண்ணப் பிளவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை ரயில் நிலையம் நுழைவாயில் நீலம் நிறத்தால் ஒளிர வைத்தனர்

 உதடு பிளவு மற்றும் அண்ணம் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனமான ஸ்மைல் ட்ரெயின் தனது 25-து ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. அண்ணப் பிளவு என்பது உணவு உண்பதில் இருந்து மூச்சுவிடுவது மற்றும் பேசுவது வரை பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் ஒருவித நிலையாகும்.

உதடு பிளவு பிரச்சனைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கங்கா மருத்துவமனை மற்றும் அண்ணப் பிளவு சீரமைப்பில் கவனம் செலுத்தும் தொண்டு அமைப்பான ஸ்மைல் ட்ரெய்ன் இந்தியா இணைந்து உலக புன்னகை தினத்தை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் உள்ள நீலகிரி மலை ரெயிலில் நீல நிற ஒளியை ஒளிர செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கு ஒரே நேரத்தில் அதிகபட்ச நினைவுச் சின்னங்கள் எரிந்ததற்கான பதிவு செய்து மூத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.

அண்ணப்பிளவு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு ஸ்மைல் ட்ரெய்ன் டிஜிட்டல் புகைப்பட ஆல்பத்தில் பதிவேற்ற படங்கள் அதிக புன்னகைக்கான கின்னஸ் உலக சாதனை பட்டத்தை பெற்றுள்ளது.அண்ணப் பிளவுடன் பிறந்த குழந்தைகளுக்கான ஆதரவை வெளிப்படுத்து விதமாக நீல நிறம் விளக்குகள் மூலம் விழிப்புணர்வு செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe