வசந்த் என்னும் நான்... மாடலிங் போட்டோகிராஃபியில் கோவையைக் கலக்கும் கலைஞன்...

published 4 months ago

வசந்த் என்னும் நான்... மாடலிங் போட்டோகிராஃபியில் கோவையைக் கலக்கும் கலைஞன்...

எல்லோருக்கும் வரலாறு உண்டு; ஆனால், கலைஞர்களின் வரலாறு நம்மைப் பிரமிக்க வியக்கும். அவர்கள் வாழ்வை ரசிக்கும் விதமும், எதிர்கொள்ளும் ஆற்றலும், வர்ணனை செய்யும் விதமுமே நமக்கு ஏற்படும் பிரமிப்புக்குக் காரணம்.

அந்த வகையில், வரலாற்றை ஆழமாய் பதித்து வருகிறார் கோவையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் வசந்த் குமார்.

நவ இந்தியா பகுதியைச் சேர்ந்த இவர், மாடலிங் போட்டோகிராஃபி துறையில் கலக்கி வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன் தனி ஒருவனாக களத்திற்கு வந்த வசந்த் இன்று பெரும்படையுடன் கோவையில் களமாடி வருகிறார்.

தனது ரம்யமான புகைப்படங்களாலும், கதை சொல்லும் புகைப்படங்களாலும் மக்களைக் கவர்ந்து வருகிறார். இவரது புகைப்படங்களால் மாடலிங் துறையில் இருந்து அடுத்த படிக்கு முன்னேறியவர்கள் அதிகம்.

கோவையில் மாடலிங் குறித்த பேச்சுக்கள் எழும் போதே, துறையைக் கெட்டியாகப் பற்றிக்கொண்ட வசந்த், இன்று கோவையின் சிறந்த புகைப்படக் கலைஞராகத் திகழ்ந்து வருகிறார்.

ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்த தனக்கு கேமிராதான் வாழ்க்கை கொடுத்தது என்று பூரிக்கிறார் வசந்த்:-

புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காரணமாகவே இந்த துறையை நான் தேர்வு செய்தேன். முதலில் நண்பர்களுடன் சேர்ந்து கண்களுக்குப் படும் அனைத்தையும் புகைப்படம் எடுத்தேன். இத்துறையில் கவனத்தை வளர்த்துக் கொண்டேன். கடந்த 2015ல் புகைப்பட கலைஞர் ஒருவருக்கு உதவியாளராக பணியாற்றினேன்.

ஒரு கேமிரா வாங்குவதற்கு முடியாமல் சிரமப்பட்டு வந்த எனக்கு 2016ல் தான் கேமிரா கிடைத்தது. அதன் பிறகு தனியாக வி.கே. போட்டோகிராஃபி என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.

முதலில் தனித்து பணியாற்றினேன். சின்ன சின்ன விழாக்கள், வெட்டிங், மாடல் ஷூட் என்று அடுத்தடுத்த பரிமாணங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. கிடைக்கும் ஒவ்வொரு ஆர்டரையும், என் வீட்டு நிகழ்வு போல ருசித்தேன்; புகைப்படங்கள் எடுத்தேன்.

நான் அதிக அளவிலான மாடல் ஷூட் எடுக்கக் காரணம் கோவையில் உள்ள மேக்-அப் ஆர்டிஸ்டுகள் தான். மாடலிங் துறையில் பலரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். நிறைய புகைப்படக் கலைஞர்களையும், மாடல்களையும், சந்தித்திருக்கிறேன். அவர்களிடம் இருந்தும் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.

அடுத்தடுத்து கிடைத்த பெரிய ஆர்டர்கள் மூலம் தொழில் விரிவடைய ஆரம்பித்தது. இப்போது என்னுடன் 12 பேர் இணைந்து பணியாற்றுகின்றனர். தொழிலைக் காதலித்தேன். அன்புக்காதல் கொடுத்த பரிசு தான் எனது இன்றைய வாழ்க்கை.

கேமிரா வாங்க முடியாதவன் என்று என்னை நான் தாழ்த்திக் கொள்ளாமல் உழைத்தேன். யாரைப்பார்த்தும் பொறாமை கொள்ளாமல், கவனத்துடன் முழு உழைப்பைக் கொடுத்து, தினமும் கற்றுக் கொள்பவர்கள் அனைவரும் வாழ்வில் உயரம் தொடலாம். என்று  நம்பிக்கை பொழிந்தார் வசந்த். VK Photography Instagram page https://www.instagram.com/vkphotography.cbe/

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe