கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் உருண்டு பிரண்டு கண்ணீர் மல்க மனு அளித்த கூலித்தொழிலாளி...

published 4 months ago

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் உருண்டு பிரண்டு கண்ணீர் மல்க மனு அளித்த கூலித்தொழிலாளி...

கோவை; கூலி பாக்கி தொடர்பாக, முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கான மனுவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் படுத்து உருண்ட குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கோவை மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரது வீட்டை புதுப்பிப்பதற்காக 57,000 சம்பளத்திற்கு மாணிக்கம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

5000 ரூபாயை முன்பணமாக செலுத்திய ராம்குமார், மீதமுள்ள பணத்தை வேலை முடிந்ததும் கொடுத்து விடுவதாக மாணிக்கத்திடம் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், வேலை முடிந்தும், மீத சம்பளத் தொகையை (52,000) கொடுக்காமல், வீட்டு உரிமையாளர் ராம்குமார் தன்னை ஏமாற்றுவதாக மாணிக்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தும், மனு மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்று மாணிக்கம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனுவை விசாரிக்க உதவுமாறு தமிழக முதலமைச்சர்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe