முதலமைச்சர் ஸ்டாலின், அவரது இல்லத்திற்கு மட்டும் விடியலை தந்திருக்கிறார்- கோவை எம்.எல்.ஏ சாட்டு...

published 4 months ago

முதலமைச்சர் ஸ்டாலின், அவரது இல்லத்திற்கு மட்டும் விடியலை தந்திருக்கிறார்- கோவை எம்.எல்.ஏ சாட்டு...

கோவை: தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான அம்மன் அர்ஜுனன் தலைமை வகித்தார். கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது, வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் பதாகைகளை ஏந்தியபடி, நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். உடனடியாக சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த மனித சங்கிலி போராட்டத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கூறுகையில், விடியலை தருகிறேன் என்று வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரது இல்லத்திற்கு மட்டும் விடியலை தந்திருப்பதாகவும் இந்த ஐந்து ஆண்டுகள் எப்போது முடியும், அதிமுக ஆட்சி எப்போது வரும் என்றும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அதிமுக ஆட்சி ஏழை எளிய மக்களுக்காகவே நடத்தப்பட்டது என்றும் ஆனால் திமுக ஆட்சியில் பணக்காரர்கள் கூட வாழ முடியாது என்றும் கூறினார். 

சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு  பிற மாநிலங்களுக்கு செல்வதாகவும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவையில், தற்போது பஞ்சாலைகளை பார்க்கவே முடியவில்லை. 2026 ஆம் ஆண்டு யார் தடுத்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மலரும் என கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe