கோவையில் பெய்த கனமழையால் நிரம்பிய நீர்நிலைகள்- மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு…

published 3 weeks ago

கோவையில் பெய்த கனமழையால் நிரம்பிய நீர்நிலைகள்- மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு…

கோவை: வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக கோவை அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. 

இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளம், தடுப்பணைகள் நீர் நிரம்பி வழிகிறது. இதனால் குளம், தடுப்பணைகளில் உள்ள மதகுகளை திறந்து உபரி நீரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து இன்று, செல்வசிந்தாமணி குளத்தின் நீர் நிரம்பியதை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இந்த ஆய்வின் போது செயற் பொறியாளர்  கருப்புசாமி, உதவி செயற் பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் சென்று இருந்தனர். 

நீர்மட்ட உயர்வின் காரணமாக செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து பெரிய குளத்திற்கு உபரி நீரின் மதகுகளைத் திறந்து அந்த வழியாக உபரி நீரை வெளியேற்றினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe