கோவையில் அவசர கால கட்டுபாட்டு உதவி மையம்- மக்களுக்கு ஆட்சியரின் அறிவுறுத்தல்...

published 3 weeks ago

கோவையில் அவசர கால கட்டுபாட்டு உதவி மையம்- மக்களுக்கு ஆட்சியரின் அறிவுறுத்தல்...

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில், அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுபாட்டு உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது,
வடகிழக்கு பருவமழை தற்பொழுது தொடங்கி உள்ளதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 


மேலும் பொதுமக்கள் ஆபத்தான ஆறு  மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் செல்பி (Selfie) எடுப்பது, குளிப்பது போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். கனமழையின் போது ரயில்வே சுரங்கப்பாதை, தரைப்பாலம் உள்ளிட்ட இடங்களில்  மழைநீர் தேங்கி இருக்கும் போது அப்பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்திட வேண்டும். மழையினால் தங்களது வீடுகளுக்கு அருகில் மரங்கள், கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர் ஏதேனும் விழும் நிலையில் இருந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு அல்லது மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

மேலும் மழைக்காலத்தில் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள குடிநீரை சூடுபடுத்தி குடிக்க வேண்டும் என  கேட்டுக்கொள்கிறேன் என  மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe