தீபாவளியை முன்னிட்டு கோவையில் புத்தாடைகள் மற்றும் நகைகளை வாங்க குவியும் மக்கள்- காவல்துறை கூறும் அறிவுரை என்ன?

published 2 weeks ago

தீபாவளியை முன்னிட்டு கோவையில் புத்தாடைகள் மற்றும் நகைகளை வாங்க குவியும் மக்கள்- காவல்துறை கூறும் அறிவுரை என்ன?

கோவை: 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தற்பொழுதே பொதுமக்கள் புத்தாடைகள் நகைகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான கோவையில் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான ஜவுளி கடைகள் நகைக்கடைகள் இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. இன்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் தீபாவளி புத்தாடைகளை வாங்கி செல்கின்றனர்.

பொதுமக்கள் அதிகளவு வருவதால் சாலையில் இரு புறங்களிலும் பேரி கேட்டுகள் அமைக்கப்பட்டு அதற்குள்ளாகவே  நடந்து செல்ல வேண்டும், வாகனங்களை சாலையோரம் நிறுத்தக்கூடாது பார்க்கிங் இடத்திலேயே நிறுத்த வேண்டும் எனவ காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாட்ச் டவர்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அவர்கள் எடுத்து வரும் உடமைகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இம்முறை கடைகள் மட்டுமல்லாமல் சாலையோர கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe