டவுன்ஹாலில் வாடகைக்கு விடப்படும் வணிகவளாக கடைகள்- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஓர் அறிவிப்பு...

published 2 weeks ago

டவுன்ஹாலில் வாடகைக்கு விடப்படும் வணிகவளாக கடைகள்- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஓர் அறிவிப்பு...

கோவை: தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும்உள்ள மகளிர் குழுக்கள் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு அடைந்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழுக்களில் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் பணி செய்பவர்கள் தங்களது தொழிலினை மேம்படுத்தி லாபகரமாக செயல்படுத்திடும் வகையில் மாவட்டந்தோறும் பூமாலை வணிக வளாகங்கள் புனரமைக்கப்பட்டு 29.06.2023 அன்று  தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவை டவுன்ஹால் அருகிலுள்ள பூமாலை வணிக வளாகம் அதே நாளில் துவக்கி வைக்கப்பட்டது. வணிகவளாகம் மாதாந்திர மற்றும் 6 மாத வாடகை அடிப்படையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கப்படவுள்ளது. பூமாலை வணிக வளாகத்தில் கடை எண்: 11 முதல் 22 வரை உள்ள கடைகள் காலியாக உள்ளது.

இக்கடைகளை வாடகைக்கு பெற விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது விண்ணப்பங்களை 28.10.2024க்குள் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம். இரண்டாம் தளம் (பழைய கட்டிடம்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 0422-230 1855 என்ற  தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe