Rhythm Of Coimbatore என்ற பாடலை வெளியிட்டார் நடிகர் சத்யராஜ்..

published 3 weeks ago

Rhythm Of Coimbatore என்ற பாடலை வெளியிட்டார் நடிகர் சத்யராஜ்..

கோவை: நவம்பர் மாதம் கோவை விழா கொண்டாடப்பட உள்ளது.  அதற்கான ஏற்பாடுகளை கோவை விழா குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று Rhythm Of Coimbatore என்ற பாடல் வெளியிடப்பட்டது.

சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சத்யராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இந்த பாடலை வெளியிட்டனர்.

முன்னதாக நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுமி கோவையின் பெருமையை பற்றி கவிதை பாடியது அனைவரையும் கவர்ந்தது

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய நடிகர் சத்யராஜ் கோவை விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்தார். மேலும் அந்த சிறுமி கவிதை பாடியதை பாராட்டினார். எம்ஜிஆர் பிரபலமாக பட்டுக்கோட்டை பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததாகவும் தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் பற்றி பேசிய அவர் தெலுங்கானாவில் இருந்து வந்தாலும் தமிழை நன்றாக பேசுவதாக தெரிவித்தார். 

மேலும் தான் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் சரளமாக தெலுங்கு பேச வராது, Prompt இருந்தால் தெலுங்கு மட்டுமல்ல பல நாடுகளின் மொழிகளிலும் பேசலாம் என தெரிவித்தார். கோவையில் தனக்கு பிடித்த உணவு அரிசி பருப்பு சாதம் எனவும் அதுமட்டுமின்றி கோவையில் அனைத்து உணவுகளும் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

உரையில் கொங்கு தமிழில் பேசிய அவர் தற்பொழுது கோவை தமிழ் குறைந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் நடிகர்களுக்கு கோவை மிகவும் பிடிக்கும் எனவும் தட்பவெப்ப நிலை நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe