மன அழுத்தத்தை போக்குவதற்கு கோவையில் காவலர்களுக்கு விளையாட்டு போட்டிகள்...

published 3 weeks ago

மன அழுத்தத்தை போக்குவதற்கு கோவையில் காவலர்களுக்கு விளையாட்டு போட்டிகள்...

கோவை: கோவை மாநகர காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

கோவை மாநகரில் பணிபுரியும் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்காகவும் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காகவும் வாரந்தோறும் உடற்பயிற்சி யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இன்றைய தின நிகழ்வில் பலூன் உடைத்தல், நடனம் ஆடுதல், உட்பட பல்வேறு விளையாட்டு பயிற்சிகளும் யோகா பயிற்சிகளும் வழங்கப்பட்டது. கோவை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வு காவல் துணை ஆணையாளர் சரவணன் மேற்பார்வையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவை மாநகர ஆயுதப்படை உதவியாளர் நாகராஜ் மேற்கொண்டார்.

இன்றைய தின பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe