மருதமலையில் மாற்று மதத்தினரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்- காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை...

published 4 hours ago

மருதமலையில் மாற்று மதத்தினரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்- காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை...

கோவை: கோவை மருதமலையில் மாற்று மதத்தினரை உடனடியாக பதவி நீக்கம் செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை, மருதமலை சுப்ரமணியசாமி கோவிலில் இன்று நடைபெற்ற வேல் வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசிய அவர், கடந்தாண்டு இந்த வேல் வழிபாடு அன்னையர் முன்னணி சார்பில் சென்னிமலையில் துவங்கி பழனியில் நிறைவடைந்தது. இன்று மருதமலையில் வேல் வழிபாடு நடைபெற்றது.

மக்கள் மத்தியிலே இந்த வேல் வழிபாடு கொண்டு செல்லப்பட்டு  25 ஆம் தேதி திருப்பூரில் நிறைவடைய  உள்ளதாகவும், அதில் கலந்து கொள்ள அனைவரும் வர வேண்டும் என கூறினார்.
மருதமலையில் மாற்று மதத்தினரை பணியில் அமர்த்தி உள்ளதாகவும், அவர்கள் எப்படி இந்த ஆன்மீக தளத்தில் பக்தர்களை நடத்துவார்கள் கேள்வி எழுப்பியவர், பழனியில் இஸ்லாமியர்களுக்கு கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு விட்டதாகவும், அங்கு அவர்கள் கறி போன்ற உணவுகளும் சமைப்பது  பக்தர்கள் செல்கின்ற பாதையில் போட்டதால் அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் நீதிமன்றம் சென்று நடவடிக்கை எடுத்ததாகவும் அதே போன்று மருதமலையில் மாற்று மதத்தினர் எப்படி கலாச்சாரத்தில் இருப்பார்கள் ?  அவர்கள் கலாச்சாரம் வேறு உடனடியாக அவர்களை பணியிட மாற்ற வேண்டும் என்றும்,  பணி நீக்கம் செய்ய வேண்டும் இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரித்தார். 

 ஈஷாவிற்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவதாகவும் உடல் நலம் பெற வேண்டி, யோகா போன்ற பயிற்சிகள் அளிப்பதாகவும், பள்ளி, கல்லூரிகள் நடத்தி மக்களுக்கு சேவை செய்து வருவதை கம்யூனிஸ்டு விழா பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார். ஈஷாவிற்குள்  மாதர் சங்கம் சென்றால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe