மேட்டுப்பாளையம் அருகே வளர்ப்பு நாயை தூக்கிச்சென்ற சிறுத்தை- சிசிடிவி காட்சிகள் உள்ளே…

published 3 days ago

மேட்டுப்பாளையம் அருகே வளர்ப்பு நாயை தூக்கிச்சென்ற சிறுத்தை- சிசிடிவி காட்சிகள் உள்ளே…

கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அறிவொளி நகர், வெள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே அப்பகுதிகளில் வீட்டில் வளர்த்து வரும் வளர்ப்பு நாய்கள் அடிக்கடி காணாமல் போயின. 

இந்நிலையில் கடந்த அக்.21ஆம் தேதி அறிவொளி நகர் பகுதியில் ருக்குமணி அம்மாள்(60) என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயை சிறுத்தை ஒன்று தூக்கிச்சென்றதாக அவர் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கையை மேற்கொண்டனர். முன்னதாக அதே அக்டோபர் மாதத்தில் வெள்ளிப்பாளையம் கருப்பராயன் கோவில் அருகே ஊருக்குள் அடிக்கடி உலா வந்து நாய்களை கவி செல்லும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள மோத்தேபாளையம் பகுதியில் மோகன் குமார்(50) என்பவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.கடந்த நவ.8 ஆம் தேதியன்று அதிகாலை சென்னாமலை கரடு பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று இவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயை சத்தம் இல்லாமல் வந்து தூக்கிக்கொண்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

இந்த வீடியோ காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கடந்த நவ.8 ஆம் தேதியன்று பதிவாகியுள்ளது.இந்த வீடியோவை நேற்று முன்தினம் பார்த்த மோகன் குமார் இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ்க்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தில் சிறுத்தையின் கால் தடம்,சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர். 
ஆய்வில் சிறுத்தை வந்து நாயை தூக்கிச்சென்றது உறுதியானதையடுத்து அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே வெள்ளிப்பாளையம்,அறிவொளி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்த நிலையில் தற்போது சிறுத்தை நடமாட்டம் மோத்தேபாளையத்தில் உறுதியாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சிறுமுகை வனச்சரக மனோஜ் கூறுகையில் மோத்தேபாளையத்தில் வசித்து வரும் மோகன் குமாரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயை சிறுத்தை தூக்கிக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஏற்கனவே அறிவொளி நகர் சென்னாமலை கரடு பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிறுத்தை கூண்டை இப்பகுதிக்கு இடமாற்றம் செய்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிறுத்தையின் கால் தடம் பதிவான பகுதிகளில் இன்று கூண்டு வைத்துப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எனினும்,இரவு நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/XKuvqeEMV0E

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe