கோவையில் புதிய தாழ்தள சொகுசு பேருந்துகள் அறிமுகம்...

published 2 weeks ago

கோவையில் புதிய தாழ்தள சொகுசு பேருந்துகள் அறிமுகம்...

கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவை கருமத்தம்பட்டி கிளையில், 24 எண்ணிக்கையிலான புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கருமத்தம்பட்டி கிளை வளாகத்தில், 24 எண்ணிக்கையிலான புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 100 எண்ணிக்கையிலான தாழ்தள சொகுசுப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 24 பேருந்துகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன. 

இந்த பேருந்துகள் உக்கடம் சோமனுர்(90A) வழித்தடத்தில் 5 பேருந்துகளும், உக்கடம் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி(90/90A) வழித்தடத்தில் 1 பேருந்தும்.
காந்திபுரம் -சோமனுர்(20A) வழித்தடத்தில் 5 பேருந்துகளும், காந்திபுரம் சோமனூர்
(40A/20A) வழித்தடத்தில் ஒரு பேருந்தும், காந்திபுரம் துடியலூர்(111&111A) வழித்தடத்தில் 6 பேருந்துகளும், காந்திபுரம் வாலையார்(96) வழித்தடத்தில் 4 பேருந்துகளும், காந்திபுரம் வேலந்தாவளம்(48&48A) வழித்தடத்தில் 2 பேருந்துகளும் என மொத்தம் 24 பேருந்துகள் மேற்காணும் வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது.

பேருந்துகளின் முன் மற்றும் பின்புற அச்சு ஆகிய இரு பகுதிகளிலும் Air Suspension System பொறுத்தப்பட்டுள்ளதால் பேருந்து மிதவை பேருந்தாக செயல்படும். பயணிகள் இறங்கும் இடத்தை அறியும் வகையில் முன் கூட்டியே ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்தி கதவுகள் மூடிய நிலையில் இருந்தால் மட்டுமே பேருந்து நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் எவ்வித சோர்வும் ஆகாத வகையில் கியர் மாற்றம் இல்லாத (Auto Gear Shifting) பேருந்துகளாக
வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சக்கரநாற்காலி உடன் ஏறி இறங்கும் வகையில் சாய்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள்
சக்கரநாற்காலி உடன் பயணம் செய்யும் பொழுது Wheel Chair Lock செய்யும் வசதி செய்யப்பட்டடுள்ளது.

பேருந்துகளின் தளம் தரைத்தளத்தில் இருந்து 300 mm உயரம் மட்டுமே உள்ளது எனவே இப்பேருந்தில் அனைத்து வயது மகளிர்கள் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்கி பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe