கோவையில் ஜி.பி.எஸ் வைத்து 50 சவரன் கொள்ளை- இருவர் கைது…

published 22 hours ago

கோவையில்  ஜி.பி.எஸ் வைத்து 50 சவரன் கொள்ளை- இருவர் கைது…

கோவை: கோவை, பூ மார்க்கெட் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் குமார் 43, அவரது மனைவி சங்கீதா 40, ஆகியோர் ஆர்.எஸ்.புரத்தில் வாடகை வீட்டில் குடி இருக்கின்றனர். அக்டோபர் 21 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றனர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அன்று பிற்பகல் குமார் மொபைல் போனில் அழைத்த வீட்டு உரிமையாளர் வீட்டு கதவு திறந்து இருப்பதாக தெரிவித்தார். குமார் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் பீரோவில் வைத்து இருந்த தாலி செயின், காசு மாலை, ஆரம், வளையல் உள்ளிட்ட 50 சவரன் நகைகள் 14,000 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும் கொள்ளை அடித்து பின் கீழே இறங்கி வருவதும், பதிவாகி இருந்தது. அப்பொழுது வீட்டின் உரிமையாளர் செல்வராஜை பார்த்ததும் அங்கு இருந்து இருவரும் தப்பிச் சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது. அப்பகுதியில் இருந்த பல்வேறு சி.சி.டி.வி பதிவுகளைக் கொண்டு திருடர்களை போலீசார் தேடினர். இருவரும் அந்த இடத்தில் இருந்து கேரளா மாநிலம் நோக்கி சென்றதும், வாகனப் பதிவு எண் வாயிலாக கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விரைந்து பாலக்காடு பள்ளி வீதியில் சேர்ந்த ஜாகிர் உசேன், மோனிஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் 50 சவரன் நகைகளும் மீட்கப்பட்டன. குமாரின் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க ஜாகிர் உசேன் அடிக்கடி சென்று உள்ளார். அப்பொழுது அவரது வீட்டில் கொள்ளை அடிக்க முடிவு செய்தார். அவரது நடமாட்டத்தை தெரிந்து கொள்ளும் வகையில் குமாரின் இருசக்கர வாகனத்தில் மேக்னெட்டிக் ஜி.பி.எஸ் கருவி பொருத்தி உள்ளார். பின்னவர் எங்கு செல்கிறார் ? எப்பொழுது வீட்டில் இருந்து கிளம்புகிறார் ? என தொடர்ந்து ஒரு வாரம் கண்காணித்து உள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை ஜி.பி.எஸ் வாயிலாக உறுதி செய்த ஜாகிர் உசேன் அவரது கூட்டாளி மோனிஷ் ஆகிய இருவரும் சென்று கொள்ளை அடித்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் ஜாகிர் உசேன் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா ? என்பதை தெரிந்து கொண்டு அவர்களிடம் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் எனக் கூறி பணம் பறித்து செல்வதை வழக்கமாகக் கொண்டவர் என்பதும், இது தொடர்பாக அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe