கோவையில் பீப் கடை தம்பதியருக்கு கொலை மிரட்டல்- மாநகர காவல் ஆணையரிடம் புகார்…

published 10 hours ago

கோவையில் பீப் கடை தம்பதியருக்கு கொலை மிரட்டல்- மாநகர காவல் ஆணையரிடம் புகார்…

கோவை: கோவையில் பீப் கடை நடத்திய அபிதா தம்பதிகளுக்கு பாஜகவை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை அதைத்தொடர்ந்து தம்பதியர் இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி புகார் மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர்கள்,தாங்கள் உடையாம்பாளையம் பகுதியில், பள்ளி அருகே பிரியாணி கடை வைத்து நடத்தி வருவதாகவும், கடந்த கிறிஸ்மஸ் பண்டிகை அன்றுதான் கடை ஆரம்பித்ததாகவும், பிஜேபியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், இங்கு யாரைக் கேட்டு கடை ஆரம்பித்தீர்கள், எங்க பீப் கடை எல்லாம் போடக்கூடாது என கூறினார். 

அதற்கு நாங்கள் எல்லோரிடமும் அனுமதி பெற்று கடை வைத்திருக்கிறோம் என்று கூறியும் அவர் எங்களை மிரட்டி சென்றார். கடந்த ஐந்தாம் தேதி மாலை தனியாக வந்த அவர், மீண்டும் எங்களை கடையை விரைவாக அகற்றக் கூறியும் இல்லை என்றால் கடையை உடைத்து விடுவேன் என்றும் கடுமையாக மிரட்டினார். அங்கிருந்து தொலைபேசி மூலம் ஆட்களையும் வரவைத்து மிரட்டினார். 

நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி உணவு விற்கவில்லை விருப்பப்பட்டவர்கள் வந்து சாப்பிடுகிறார்கள் அதை தடுக்காதீர்கள் என்று கூறினோம். அன்று எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலும் பண நஷ்டமும் ஏற்பட்டது. நாங்கள் சட்டப்படி காவல் நிலையத்திலும் அனுமதி பெற்றே கடை வைத்திருக்கும். ஜாதி பிரச்சனை  ஏற்படும் என்று கூறி எங்களை மிரட்டுகின்றனர் எனக் கூறினார். 

நாங்கள் எங்கு கடை போட்டு இருந்தோமோ அங்கேயே கடையை மீண்டும் தொடர வேண்டும் என்றும், எங்களுக்கு தெரிந்த தொழில் இது மட்டுமே எனக் கூறியும், என்னுடைய பீப் கடை தற்போது அகற்றப்பட்டு இருப்பதால் கமிஷனர் மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்றும், குடும்பம் மற்றும் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வேண்டும் என்றும், பண பலம் இருக்கும் அவர்கள் எங்களை மிரட்டுவதால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் மனு கொடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe