கோவையில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய கும்பல்

published 1 week ago

கோவையில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய கும்பல்

கோவை: குடும்ப உறுப்பினர்கள் என கூறி கோவையில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை தடாகம் ரோடு வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு இரவு, பகல் பாராமல் இளைஞர்கள் வந்து சென்றனர்.

இதனால் சந்தேகமடைந்த பக்கத்து குடியிருப்பு வாசிகள் சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

அதில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரித்ததில், சில மாதங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் உட்பட 3 பேர் கணவன் - மனைவி என கூறி வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர்.

பின்னர் சில இளம்பெண்களை வரவழைத்து அங்கு விபசாரம் நடத்தியதும் தெரியவந்தது. இது குறித்து சாயிபாபா காலனி போலீசார் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்(23), விக்ரம் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், கோவை வடவள்ளி தில்லை நகர் 8வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வடவள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து விபசாரம் நடத்தியது கோவை சுந்தரம் வீதியை சேர்ந்த சீனிவாசன்(37) மற்றும் 3 பெண்கள் என்பது தெரிந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe