அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கிய கோவை ஆட்சியர்!

published 2 months ago

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கிய கோவை ஆட்சியர்!

கோவை: கோவை சோமையனூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினார்

சோமையனூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது  வருகின்றது. இப்பள்ளியில், இன்று நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் ட்ரஸ்ட், மற்றும் என்டிடிவி டாடா அமைப்பின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புதிய கழிப்பறைகள், உயர் கல்வி பெற மாணவ மாணவியர்களுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும்ஒவிழா, மற்றும் மலைவாழ் மக்களின் தேவைகளுக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு கல்வி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பள்ளியின் தலைமையாசிரியை தமிழ் செல்வி வரவேற்புரையாற்றினார். நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேஸ்வரி சுந்தரராஜ் இத்திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார்.

இதனை தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் ட்ரஸ்டு அமைப்பின் நிறுவன தலைவர் சங்கரநாராயண், மாணவர்களுக்கு அளிக்கக் படும் நலத்திட்டங்களால் மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் அடைந்த சாதனைகளை எடுத்து கூறினார்.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இரவு நேரத்தில் படிப்பை தொடர சிறிய அளவிலான மின் விளக்குகளை மாணவர்களுக்கு என்டிடி டாடா அமைப்பின் இயக்குநர்கள் சிவக்குமார் சதாசிவம், மற்றும் சதீஷ் பாபு, ஆகியோர் வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe