கோவை மத்திய சிறையில் பார்வையாளர் நுழைவு பகுதி மாற்றம்

published 2 weeks ago

கோவை மத்திய சிறையில் பார்வையாளர் நுழைவு பகுதி மாற்றம்

கோவை, அக்.24: கோவை மத்திய சிறையில் 2,800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறை கைதிகளை சந்திக்க கடந்த சில மாதங்களுக்கு முன் விண்ணப்ப மனு கொடுத்து காத்திருந்து சந்திக்க வேண்டியிருந்தது. இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு செல்போனில் முன் பதிவு செய்து கைதிகளை உறவினர்கள் சந்திக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

இதில், செல்போனில் டோக்கன் பெற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கி சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏடிடி காலனி நெடுஞ்சாலை அலுவலகம் வழியாக செக்போஸ்ட் அமைத்து கடந்த காலங்களில் பார்வையாளர்கள் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2 நாளுக்கு முன் இந்த நடைமுறை மாற்றப்பட்டது.

ஏடிடி காலனி பகுதிக்கு மாற்றாக காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் தமிழ்நாடு ஓட்டல் பகுதி நுழைவு வாயில் வழியாக பார்வையாளர்கள் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கேயே பொருட்கள், உடைமைகளை சோதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பார்வையாளர்கள் காத்திருப்பு பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. சிறை எஸ்.பி செந்தில்குமார் மேற்பார்வையில் சிறை கைதிகளை சந்திக்க வருபவர்களின் பொருட்கள் தொழில் நுட்ப கருவிகள் மூலமாக சோதிக்கப்படுகிறது. கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை யாரும் வழங்காமல் இருக்க சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe