கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவியதாக இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்...

published 3 weeks ago

கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவியதாக இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்...

கோவை:கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவியதாக இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கணேசன் மற்றும் முத்துக்குமார் என்ற இருவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

இது குறித்தான விசாரணையில் போலீஸ் பிடியில் இருந்த கஞ்சா வியாபாரிகளிடம் 2000 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு, பணியில் இருந்த போலீசாரே செல்போனை கொடுத்து உதவியது தெரிய வந்தது.

இதனையடுத்து 
கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள்  ரவிசேகர் மற்றும் மாயசுதாகர் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து துணை ஆணையர் சரவணக்குமார் உத்தரவிடடார்.

கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து போலீசார் இருவரும் G PAY மூலம் பணம் பெற்று  இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe